Skip to main content

Posts

Showing posts from June, 2016

வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு!

                                    வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும்.  'சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத்’   என்பது வேதவாக்கு.  வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும் என்பது நம்பிக்கை. ஆலயங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்களப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.  அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேக காலங்களில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும். அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள். சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம். புராணங்களில் வலம்புரி

வாழ்வை வளமாக்கும் பூஜைகள் ....... ஸ்ரீசக்கர மகாமேரு பூஜை வழிபாட்டு முறை ................

                                     நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்படுத்தினர். ‘ஸ்ரீவித்யை என்னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்’ என்று சொல்கின்றன, ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள். குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம். ஸ்ரீசக்கரத்தின் மகிமை: மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது. மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும் விறல் கெழுமு வேழமுகன் விரைமலர்த் தாளினைத் தொழுவாம். மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். சக்தி வாய்ந்த இதன் வழிபாட்டுப் பாட

ருத்ராட்ச முகத்தில் உள்ள தேவதைகளால் விலகும் பாவங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்துவீர்

                            ஒரு நாள் ஜமதக்கினி மகரிஷியின் வயலில் ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு நெற்கதிர் எடுத்து விரட்டினார். அந்தப்பசு இறந்துவிட்டது. இதனால் பாவம் செய்து விட்டோம் என்று கருதி அவர் சுகமகரிஷியிடம் சென்று தன் துன்பத்தை கூறினார். உடனே அவர், ஜமதக்கினி நீ காசிக்கு சென்றால் ஒரு முக ருத்ராஷம் கிடைக்கும். அதை நீ அணிந்துக் கொண்டால் உன்னுடைய ‘கோ ஹத்திய தோஷம்’ நீங்கும் என்று கூறினார். ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு தேவதை அதிபதியாக இருப்பார்கள். அவரவர் அந்தந்த பாவங்களை அழித்து விடுவார்கள். இந்த ருத்ராஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் பாவத்தை அழிக்கும் என்று சொன்னாராம். ஒரு முகம்: ஒரு முகம் கொண்ட ருத்திராட்சம் பிரம்ம ஹத்திய தோஷம் அழிக்கும். இது சிவனின் மற்றொரு உருவம் என்று கருதப்படுகிறது. இதை அணிந்தால் சிவனைப் பூஜை செய்த பலன் கிடைக்கும். இரண்டு முகம்: இரண்டு முக ருத்ராஷம் அர்த்த நாரிஸ்வர சொரூபம். அனைத்து பாவங்களையும் அழிக்கும். இதை அணிந்தால் சிவனையும், சக்தியையும், பூஜை செய்த பலன் கிடைக்கும். மூன்று முகம்: மூன்று முகம் ருத்ராஷத்திற்கு அக்னிதேவன் அதிபதி. இந்த ர

ஒரு முகம் ருத்ராட்சம் முதல் பத்திநான்கு முகம் ருத்ராட்சமும் பலன்களும்

  ஒரு முக ருத்ராட்சம்:                                   அனைத்து முக ருத்ராட்சங்களின் அரசனாக ஒரு முக ருத்ராட்சமே கருதப்படுகிறது. இது சிவபெருமானின் முகம். ஒருமுக ருத்ராட்சத்தை அணிந்தால் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும். சூரியனின ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அமையும். இரண்டு முக ருத்ராட்சம்:                தேவதேவி ஸ்வரூபம். இது பாவங்களை அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக இருப்பதால், அறிவு திறன், மதிநுட்பம் மேம்படுத்தும். முகம் பொலிவு பெறும். அம்பிகையின் அருள் நிச்சயம். மூன்று முக ருத்ராட்சம்:               அக்னி ஸ்வரூபம். தோஷங்களையும், பாவங்களையும் நெருங்கவிடாமல் அதை எரித்துவிடும் ஆற்றல் கொண்டது. மூன்றாம் எண் குருபகவானின் எண் என்பதால் சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற வழி பிறக்கும். கல்வி சிறப்பு தரும். வித்தைகள் கைக்கூடும். நான்குமுக ருத்ராட்சம்:                பிரம்மதேவனின் வடிவம். வேதங்கள், புராணங்கள் கற்ற புண்ணிய பலன்களை இரட்டிப்பாக்கும். இது இராகு பகவானின எண் என்பதால், நல்ல செல்