மருத்துவ குணங்கள்: ஐந்து முக ருத்திராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து , அந்த சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்திராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை கண் இமைகள் மீது தடவிக்கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்திராட்சத்தைத் தூளாக்கி , துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால் , பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணிநேரம் ஊற வைத்து பிறகு ருத்திராட்சத்தை நீக்கிவிட்டு தண்ணீரை உட் கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணமாகும். சிரசு , உரசு , புஜம் என்பவற்றில் ருத்திராட்சை அணிந்தால் சிவனுக்கு சமமாக மாறலாம் என்றும் எல்லா முயற்சிகளும் சாதனைகளாக்கலாம் என்றும் , அவர்வசிக்கும் பிரதேசமே புண்ணிய பூமியாகுமென்றும் கூறுகின்றார். புராணங்கள் எடுத்துரைப்பதற்கு மேல் மருத்துவத்துறை இதன் நற்குணங்களை மிகவும் புகழ்கின்றது. ருத்திராட்சை கழுத்திலணிவதால் புற்று நோய்முதலிய நோய்கள் கூட தணியும் என்று அண்மையில் வெளிவந்துள்ள சில ஆராய்ச்சிக்குறிப்புகள் வெளிப்படுத்