நிறங்கள் பற்றிய தகவல் (color): ############################ சூரியனின் ஒளி, வெளிப்பார்வைக்கு வெண்மை நிறம்போலத் தோன்றும். அது, எல்லா நிறங்களையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. சூரிய ஒளியில் ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு என்னும் ஏழு நிறங்கள் உள்ளன. இந்நிறங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து அது அதற்குரிய அளவின்படி சேர்த்துக் குழைத்தால், இறுதியில் வெண்மை நிறம் தோன்றுவதைக் காணலாம். சூரியவொளியில் ஏழு நிறங்கள் அடங்கியிருப்பதை அறிந்த முன்னோர்கள், அதனை வெளிப்படையாகக் கூறாமல், மறைத்துக் கூறினார்கள். சூரியன் பவனி வருகின்ற தேரில் ஏழு குதிரைகள் பூட்டியிருப்பதாகக் கூறியுள்ளது, சூரியவொளியில் ஏழுவண்ணங்கள் இருப்பதைக் குறிப்பதாகும். சூரியனின் தேருக்கு ஒரு சக்கரம் மட்டுமே என்பது, உலகம் என்பதையும் அது உருண்டு கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பதாகும். மனிதவுடம்பிலுள்ள புறவுறுப்புகளும் அகவுறுப்புகளும் ஏழுவகை நிறங்களோடு கூடியிருக்கின்றன. உடல் உறுப்புகள் செழிப்பதாகவும் செம்மையாகவும் இருக்கும் போது, உறுப்புகளின் நிறங்களும் செம்மையாக இருக்கும். உறுப