Skip to main content

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் :
(RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI
###################################


சிம்ம இராசிகாரர்களும், 
சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும்

ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும்.

எண் கணிதப்படி-1,10,19,28ம் 

தேதியில் பிறந்தவர்களும் 

மாணிக்கம் இராசி கல் 

பதித்த மோதிரம் அணியலாம்.
*******************************



மாணிக்கம் அணிவதன் பயன்கள்:

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும் 

துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால் 

நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், 

செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்

 கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி

படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன.

மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன.

சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது.


குளிர்ச்சி சம்பந்தத்தினால் ஏற்படும் வியாதிகளை மாணிக்க கல் குணபடுத்தும்.

மருத்துவ ரீதியாக உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம் இருதய நோய், தோல் வியாதி, கண் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாணிக்கக் கல்லை அணிந்தால் நோய்களின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளளாம்.

இருதயத்தையும், ரத்த ஓட்டத்தையும் வலுவடையச் செய்கிறது. மன அழுத்தம், சோகம், தேவையற்ற புலனின்ப நாட்டம் போன்றவற்றைக் குறைத்து, தைரியத்தையும் வீரத்தையும் தருகிறது.

மாணிக்க கல் அணிந்து கொண்டால் ,நல்ல ஆரோக்கியமான உடல் கட்டுடனும், நல்ல உறுதியான நட்பும், காதல், பாசம் போன்றயாவும் சிறப்பாக அமையும்.

ஒரு மனிதன் அதிர்ஷ்டமாக வாழ்வதற்கும், விதியை சமாளிப்பதற்கும் ஏதாவது ஒரு துணை வேண்டியிருக்கிறது.

அந்த வகையில் நிரந்தரமாகவும் ஆனால் ஆற்றல் மிக்க துணைவன் தான் இந்த இராசிகற்கள்.

மாணிக்கம் சூரியனின் ஆதிக்கம் என்பதால் பெயரையும் புகழையும் உயர்த்துவதுடன் சமுதாயத்தில் கௌரவமிக்க பதவிகளை வகிக்கும் ஆற்றலையும் கொடுக்கிறது.

குழந்தை மழலைச் செல்வமும் சிறப்பாக அமையும். ஜாதகத்தில் சூரியனின் பலம் கெட்டிருந்தால் நோய்கள் காரியதடை போன்ற யாவும் அந்த ஜாதகர் அனுபவிக்க நேரிடும்.

கிரகங்கள் தற்காலிக கிரக சலனத்திற்கேற்பவும்(கோசாரம் என்பார்கள்) நன்மை மற்றும் தீமைகளையும் மனிதனுக்கு கொடுத்து வருகின்றன.

கிரகங்கள் தங்களின் இருப்பு நிலைகேற்ப (கோசாரத்தில்) சுக துக்கங்களையும், நோய், வழக்குகள், காரியதடை,காரிய வெற்றி ,மன மாறுதல்கள் போன்றவற்றையும், மாறி, மாறி அளிக்கின்றன .

நமது உடலின் ஏழு முக்கிய சக்கரங்கள் இருப்பதாக மெய்ஞ்ஞானிகள் கூறிச் சென்றுள்ளனர்.

இதையே குண்டலினி சக்தி என்பார்கள். ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு வர்ணத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சக்கரங்கள் உடலின் நன்கு இயங்கும் போது உடலுக்கு நன்மையையும் ஆரோக்கியமும்கிடைக்கின்றன.

வர்ணக் குறைவுகள் ஏற்படும் போது நோய்களும், மனச் சோர்வும் மனிதனை தாக்குகிறது.

இதை நிவர்த்தி செய்ய அந்தந்த வர்ணங்களையுடைய இரத்தினங்களைப் பயன்படுத்தி, வர்ணக் குறைபாட்டை சமன் செய்து கொள்ள வேண்டும் என விஞ்ஞாணிகள் கூறுகின்றனர். இதன் மூலம் உடலின் ஏழு சக்கரங்கள் சீராகத் தூண்டப்பட்டு, உடல் ஆரோக்கியம் அடைகிறது நோய்களும் நீங்குகின்றன.

உதாரணமாக,உடலில் மூலாதாரத்தை சிவப்பு நிறம் என்றுகுறிக்கும்.

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கிரகத்தின் கதிர் வீச்சையும், அதன் அலை நீளங்களையும் கண்டறிந்துள்ளனர்.

சூரியனின் பிரதிநிதியாக உள்ளது மாணிக்கம் கல்.சூரியக்கதிர்களை மாணிக்கக் கற்கள் கிரகித்து அவற்றை நல்ல சக்தியாக மாற்றி, உடலுக்குள் செலுத்தும் தன்மை உடையது .


எனவே சூரியனின் அருள் வேண்டுபவர்கள், சூரியனின் சக்தி குறைவாக உள்ள அனைவரும் மாணிக்க கல் அணிந்து மேற்கூறிய பலன்களை பெறலாம்.

மாணிக்கம் ஒரு பிரகாசமான, காலமெல்லாம் நிலைத் திருக்கக்கூடிய, அணியத்தகுந்த ஓர் அபூர்வ ரத்தினமாகும்.

மாணிக்கத்தை தங்கம் மற்றும் ஐம்பொன் உலோகங்களில் பதித்து உடலில் படும் படியாக மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும்.

அதன் எடை 3 அல்லது 5 ரத்திகள் இருப்பதே நல்லது. மிக விலை உயர்ந்த மாணிக்கக் கல்லை வாங்க இயலாதவர்கள் அதற்குப் பதிலாக கார்னட் என்ற கல்லை வாங்கி அணியலாம்.

இந்த கல் சிவப்பு நிறத்தில் பவழத்தினைப் போன்று சற்று கூடுதலாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

குற்றமில்லாத கார்னட் கற்கள் மாணிக்கத்தை போலவே நற்பலனை அளிக்கும் தன்மை வாய்ந்த தாகும்.

மாணிக்கக் கல்லை அணியும்போது ஞாயிறு நாளில் வளர் பிறைத் திதியில் சுப வேளையில் அணிய வேண்டும்.

சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஓரையில் அணிந்துகொள்வது நல்லது.

மாணிக்கம் நவரத்தினங்களுள் ஒன்று:

இதன் சிவப்பு நிறம் குரோமியத்தால் ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் மாணிக்கத்தின் உறுதி எண் 9 ஆகும்.


இதை விட உறுதி எண் மிகுந்த படிகம் வைரம் ஆகும்.
இயற்கை மாணிக்கம் மிகத்தூய்மையாக இருக்காது, நிறத்தில் தூய்மை குறைந்து இருக்கலாம், அதனுள் நூல் போன்ற இழை காணப்படலாம்.

இதை கொண்டே இயற்கை மாணிக்கத்தையும் செயற்கை மாணிக்கத்தையும் வேறுபடுத்துவார்கள்.



ஒரு மனிதனுடைய முன்னேற்றத்திற்கும் துன்பப் பிடியில் இருந்து விடுபடவும் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பங்கு உண்டு.

அதற்கு தான் நம் முன்னோர்கள் ரோமானியர்களும், இராஜாக்களும் நவரத்தினங்களை பயன்படுத்தினார்கள்.

அவைகளை எந்தந்த திசைகளில் அணியலாம் எனவும் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.



சூரியன் இலக்கினத்திற்க

யோகதிபதியாக இருந்து(குறிப்பாக

மேஷம்,சிம்மம், விருச்சிகம்,தனுசு

 இலக்கினங்கள்) பலம்

 குன்றியிருந்தால் அவர்களுக்குப்

 பல பிரச்சனைகள் வந்து சேரும்.

அரசாங்க பயம்,தொழில் 
நிலையற்ற தன்மை ,குடும்பத்தில்
பிரச்சனைகள் வந்து சேரும்.
அந்த மாதிரி  பிரச்சனைகள் உள்ள
அன்பர்கள் மாணிக்கக் கல்
பதித்த மோதிரம் அணியும் போது.


மிகவும் மன தைரியமாகவும்
 செயல்படுவார்கள்.அதித
சிந்தனைகளால் மணம் தெளிவு
பெறும்.

 சூரியனின் கதிர்கள் எப்போதும்
அவரது உடலில் இருந்து
கொண்டே இருக்கும்.

இதனால் அவர்களுக்குப் பல
நன்மைகள் சூரியனால் உண்டாகும்.


 மேற்கூறிய நவரெத்தினங்களிலும் அசல் நகல் கண்டறியப்பட்டு அசலான ரெத்தினங்களையே நவக்கிரகங்களின் ப்ரீதியைப் பெறுவதற்கு தேர்ந்தெடுத்து மோதிரங்களிலோ அல்லது சங்கிலியிலோ பதித்து கொள்ள வேண்டும்.

அப்படித் தயார் செய்யப்பட்ட ஆபரணத்தை ஆசர சீலராக அணியப் போகின்ற நபர் தக்க குருவின் மூலமாக அவரது ஆசீர்வாதத்துடன் அணிந்து கொள்வதால் தீங்குகள், குழப்பங்கள், பயம், பகை தோஷங்கள் மறையலாம் என இந்து சமயத்தில் மூலம் அறிவிக்கப்படுகின்றன. 
#####################################

ஓம் மத்ய திசாதிபதயே சரஸ்வதி ஸமேத வாஸ்து ப்ரஹ்மனே, அதிதேவதா அக்னயே, ப்ரத்யதி தேவதா ருத்ராய, மாணிக்யாதிபதயே உஷா ப்ரத்யுஷா ஸமேத ஸுர்ய நாராயன ஸ்வாமிநே நமோந்நம:!!
#####################################

உங்கள் ஜாதகத்தில் சுபங்கள் தரக்கூடிய கிரகத்தை கணித்து, சுபங்களை அதிகரிக்க தரமான இராசிகற்கள் பதித்து செய்து தரப்படும்.
..............ஓம் ஆதித்யாய நமக................

SHIVABAIRAVAR METAL WORKS
NATURAL GEMSTONE RINGS & SPIRITUAL PRODUCTS
www.spirituals4u.blogspot.in
shivabairavaagency@gmail.com

Comments

Popular posts from this blog

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. க...

சித்தர்களின் சொன்ன வழிமுறையில் செய்யப்பட்ட ஐம்பொன் மோதிரங்கள் காப்பு:

பஞ்சலோக நகை சிறப்புகள்: ######################## பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம். தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம். இதில் தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும் , செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும். ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன. நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன் உலோகங்கள் , உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது. நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது. வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என...