இந்திர நீலம்: {BLUE SAPPHIRE} ################## இந்திரம் என்றால் வானம் என்பது பொருள். அதாவது வானத்தைப் போன்ற அழகான நீல நிறமுள்ளது ஆகும். கையில் எடுத்துப் பார்க்கும்போது உட்புறம் கருப்பாக இருக்கும். இதை வான் நீலம் என்றும் கூறலாம். இதுவே தரத்தில் சிறந்தது. விலையும் அதிகமானது. இதன் இரசாயணக் குறியீடு (AI2O3) கோரண்டம்(CORUNDAM) என்னும் வகையைச் சேர்ந்தது. நீலமாக விளையும்போது நீலக்கற்கள் எனப்படுகின்றது. நீலத்தின் கடினத்தன்மை 9. இதன் ஒப்படர்த்தி 4 ஆகும். இதன் ஒளிவிலகல் எண் 1.76 -1.77. நீலத்தின் குணங்கள் கணம், மனத்தைக் கவரும் ஒளி, நல்ல பூரிப்பு, பக்கங்களில் பூரிப்பு, புல்லைப் பிடிக்கும் தன்மை ஆகிய ஐந்தும் நீலரத்தினத்தின் குணமாக ஸ்மிருதிஸாரோத்ஸரம் கூறுகிறது. நீலக்கற்கள் குற்றங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அதை அணிந்தால் மனிதருக்கு செல்வம், ஆயுள், பலம், புகழ் ஆகியவை உண்டாகும். என பழம் நூல்கள் கூறுகின்றன. தரமான நீலக்கற்கள் அணிவதால், 1. வாழ்நாள் அதிகரிக்கும். 2. கோழைத்தனத்தை மாற்றித் தைரியத்தைக் கொடுக்கும். 3. எதிரிகள் இவரைக் கண்டு பயப்படுவ