Skip to main content

இந்திர நீலம்: {BLUE SAPPHIRE}

இந்திர நீலம்:
{BLUE SAPPHIRE}
##################
இந்திரம் என்றால் வானம் என்பது பொருள். அதாவது வானத்தைப் போன்ற அழகான நீல நிறமுள்ளது ஆகும்.

கையில் எடுத்துப் பார்க்கும்போது உட்புறம் கருப்பாக இருக்கும்.

 இதை வான் நீலம் என்றும் கூறலாம். இதுவே தரத்தில் சிறந்தது. விலையும் அதிகமானது.

இதன் இரசாயணக் குறியீடு (AI2O3) கோரண்டம்(CORUNDAM) என்னும் வகையைச் சேர்ந்தது. 

நீலமாக விளையும்போது நீலக்கற்கள் எனப்படுகின்றது. 

நீலத்தின் கடினத்தன்மை 9. இதன் ஒப்படர்த்தி 4 ஆகும். இதன் ஒளிவிலகல் எண் 1.76 -1.77.

நீலத்தின் குணங்கள் கணம், மனத்தைக் கவரும் ஒளி, நல்ல பூரிப்பு, பக்கங்களில் பூரிப்பு, புல்லைப் பிடிக்கும் தன்மை ஆகிய ஐந்தும் நீலரத்தினத்தின் குணமாக ஸ்மிருதிஸாரோத்ஸரம் கூறுகிறது.

நீலக்கற்கள் குற்றங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 

அதை அணிந்தால் மனிதருக்கு செல்வம், ஆயுள், பலம், புகழ் ஆகியவை உண்டாகும். என பழம் நூல்கள் கூறுகின்றன.

தரமான நீலக்கற்கள் அணிவதால்,
1. வாழ்நாள் அதிகரிக்கும்.

2. கோழைத்தனத்தை மாற்றித் தைரியத்தைக் கொடுக்கும்.

3. எதிரிகள் இவரைக் கண்டு பயப்படுவார்கள்.

4. வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

5. வாகனங்கள் வசதி உண்டாகும்.

6. மனத்தில் சோகம் நீங்கி, மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உண்டாகும்.

7. பூமியின் மூலமாகவும், அதிலிருந்து கிடக்கும் பொருட்களின், மூலமாகவும் இலாபங்கள் உண்டாகும்.

8. எதிர்பாராத கண்டங்கள், ஆபத்து , அகால மரணம் ஆகியவற்றை தடுக்கும்.

9. பித்தத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும்.

10. கை, கால் பிடிப்புகள், வலிகள் ஆகியவை நீங்கும்.

11. ஆரோக்கியமும் , ஆயுளும், அமைதியும் கொடுக்கும்.

12. நிர்வாகத் திறமையையும், தொழிலாளர்களின் ஆதரவையும் கொடுக்கும்.

13. தோல் வியாதிகளைக் குணமாக்கும்.

14. கல்லீரல் மற்றும் மன்ணிரலைக் குணபடுத்தும் வல்லமை உடையது.

15. பெருவியாதிகளைத் தடுக்கும் ஆற்றல் படைத்தது.

ஜாதகப்படி யார் அணிந்து கொள்ளவேண்டும்?
=================
சனி பகவானின் நட்சத்திரங்களான பூசம்,அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்ச்சத்திரங்களில் பிறந்தவர்கள் நீலமணியை அணிந்து கொள்ளலாம்.

மகரம், கும்பம், இலக்கினத்தைச் சேர்ந்தவர்கள் நீலக்கல் அணிந்து நன்மைகள் அடையலாம்.

மகரம், கும்பம் இராசிகளைச் சேர்ந்தவர்களும் நீலக்கற்களை அணிந்து சனி பகவானின் அருளை பெறலாம்.

சனியின் திசாபுத்திகள் தற்காலத்தில் நடைபெறும் அன்பர்களும், நீலக்கல்லை அணிந்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யலாம்.

சனியின் திசை முடிந்த பின்பு அந்தக் கல்லை எடுத்துவிடவேண்டும்.

ஜாதகத்தின் படி, ரிஷப இலக்கினக்காரர்களுக்கு சனி இராஜயோகத்தைக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்!
அவர் ஜாதகத்தில் பலவீனம் அடைந்திருந்தால் ஜாதகர்க்கு நன்மைகள் கிடைக்காது! 
அப்போது நீலக்கல்லை அணிந்து கொண்டு சனியின் வலிமையை அதிகரிக்கச் செய்து கொண்டால் தொழிலில் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

இதைப் போன்றே தூலம் இலக்கினக்காரர்களும் சனியின் வலிமை ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், 
நீலக் கற்களை அணிந்து யோகத்தைப்
பெருக்கிக்கொள்ளலாம்.


மிதுன இலக்கினக்காரர்களும், கன்னியா இலக்கினக்காரர்களும் சனியின் நிலைமையை ஆராய்ந்து நீலத்தை அணிந்து கொண்டால் நல்ல பலன்களை நிச்சயம் அடையலாம்.


ஜாதகப்படி சனியின் காலம், அஷ்டமச் சனி, கண்டச் சனி ஆகியவை நடைபெறும் காலங்களில் நீலம் அணிந்து கொண்டால் நல்ல பலன்களை நிச்சயம் அடையலாம்.

எண்கணிதப்படி யார் அணிந்து கொள்ளலாம்.
###############
1. ஒவ்வொரு மாதத்திலும் 8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்கள் நீலக்கற்களை அணிந்து நன்மைகளை அடையலாம்.

2. ஆங்கிலத் தேதியின்படி கூட்டு எண் 8 வரும் அன்பர்களும் நீலத்தினை அணிந்து நன்மைகளை அடையலாம்.

3. உதாரணம்: ஒருவர் 26.6.1972 ல் பிறந்துள்ளார். இவரது பிறந்த தேதியின் படி (2+6)8 வருவதால் இவர் நீலக்கல்லை அணிவதன் மூலம் நன்மை அடையலாம்.

4. மற்றவர் 3.9.1976ல் பிறந்துள்ளார் என்போம். இவரது கூட்டு எண் 3+9+1+9+6+7=35 =8 வருகிறது. இவரும் நீலரத்தினம் அணிவதன் மூலம் நன்மைகள் அடையலாம்.

பெயர்கள் 8 ஆம் எண்ணில் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

இருப்பினும் தங்களது பெயர்களை மாற்ற முடியாமல் இருப்பவர்கள் (பெயர்எண் 8,17,26,35,44 போன்ற எண்ணில் வருபவர்கள்) நீல ரத்தினத்தை அணிந்து கொண்டால் தீமைகளைக் குறைத்து கொள்ளலாம். 

மேலும் நன்மையான பலன்களையும் அடையலாம்.









அதிஷ்ட கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். 


காரிய தடைகளை சரி செய்ய முடியும்.

நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும். 


நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம். 

நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.

உங்கள் ஜாதகத்தில் சுபங்கள் தரக்கூடிய கிரகத்தை கணித்து, சுபங்களை அதிகரிக்க செய்யும் போது தான்உடல் ஆரோக்கியமும், சிந்தனையும்,ஞாணமும் பெருகும்.


தரமான ஜாதிகற்கள் மோதிரம் செய்து தரப்படும்.
#################################
SHIVABAIRAVAR METAL WORKS
NATURAL GEMSTONE & SPIRITUAL PRODUCTS
www.spirituals4u.blogspot.in
whatsappp:+917305066366

Comments