Skip to main content

ருத்திராட்சம் பயன்கள்

ருத்திராட்சம் தோன்றியது எப்படி:
சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்கு, ஜடாமுடி, மண்டை ஓடு, ருத்ராஷம்,மிருக தோல் அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள்.


இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. 

சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும்.

ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும்.

சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த  ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள்  தோன்றின.

வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு  வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. 

நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள்  வெளிப்பட்டன.

ஒரு முகம் முதல் 21 முகம் வரை கொண்ட இருப்பத்தொன்று வகை ருத்திராட்சங்கள் உண்டு. 

ருத்திராட்சத்தின் மேல் உள்ள  கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.

கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும், கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும், மேல் கையில் பதினாறும்மார்பில் நூற்றியெட்டும் தரிக்கலாம்.

சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். 

சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை.

இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.

ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.

நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும்.

உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும்.

விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.


ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. 

ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம். 

வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது.

ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.

தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது.

மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது.

குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.

ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அணிந்து வந்தால் அன்று முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.

 ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.

மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில், ருத்திராட்சம் என்பது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது.

 மருத்துவ குணம் கொண்ட ருத்திராட்ச காய்களை அணிவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை கிடைப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகிறது.

பொதுவாக, மலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மரங்கள் வளரும். தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையின், பல பகுதிகளில் ருத்திராட்ச மரங்கள் காணப்படுகின்றன. 

ருத்திராட்ச பழங்களை காய வைக்கின்றனர்.அதில் இருந்து ருத்திராட்ச காய்களை பிரித்தெடுக்கின்றனர். 

வனப்பகுதிகளில் மரக் குச்சிகளை பொறுக்குவதற்காக ஆதிவாசி இன மக்களுக்கு அனுமதி தரப்படுகிறது. 

அவர்கள், ருத்திராட்ச பழங்களை பொறுக்கி வந்து, மாலைகளாக தயார் செய்து விற்கின்றனர். 

ஆண்டு முழுவதும் ருத்திராட்ச மரத்தில் காய்கள் காய்க்கும் என்பது தான் தனிச்சிறப்பு.

 முனிவர்களும், ரிஷிகளும், பண்டிதர்களும் ருத்திராட்சம் அணிந்து, இறைவனை நோக்கி தவம் செய்தனர். 

ஒரு முகம், ஐந்து முகம் என பல வடிவங்களில் ருத்திராட்சங்கள் கிடைக்கின்றன. 

மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம்.

ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.

ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. 

கெமிக்கல் பொருட்கள், சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.

பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும்.

பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும்.

பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும்.

பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம்.

இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். 

மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.

 ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம்.

உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும்.

இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.


முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். 

ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். 

ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது .

என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். 

உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது, செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.

ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும்.

ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும், சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.

 ருத்திராட்சம் தரம் சோதனை பண்ணுவது எப்படி:
###############################
ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. 

இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு.

ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும்.

மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.

ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும்.

ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு.

இதை" பத்ராட்சம் " என அழைப்பார்கள்.

இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். 

தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.

சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக தங்கம்போல் பிரகாசிப்பதும், நல்ல வர்ணமுள்ளதுமானது தான் ருத்திராட்சம், தண்ணீரில் போட்டால் மூழ்குவதும், இரு செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை செய்தால் சுற்றக்கூடியது மான ருத்திராட்சம் ஆகியவை மிகவும் விசேஷமானவை.


ருத்திராட்சத்தின் மருத்துவ குணங்கள்:
#############################
ஐந்து முக ருத்திராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து, அந்த சாற்றை தேள் கொட்டிய  இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். 

இந்த ருத்திராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல  நிவாரணி.

இதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை கண் இமைகள் மீது தடவிக்கொண்டால் நிம்மதியான உறக்கம்  வரும். 

இந்த ருத்திராட்சத்தைத் தூளாக்கி, துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். 

தண்ணீரில் இதைப் போட்டு சில மணிநேரம் ஊற வைத்து பிறகு ருத்திராட்சத்தை நீக்கிவிட்டு தண்ணீரை உட் கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணமாகும்.

சிரசு,உரசு,புஜம் என்பவற்றில் ருத்திராட்சை அணிந்தால் சிவனுக்கு சமமாக மாறலாம் என்றும் எல்லா முயற்சிகளும் சாதனைகளாக்கலாம் என்றும்,அவர்வசிக்கும் பிரதேசமே புண்ணிய பூமியாகுமென்றும் கூறுகின்றார்.

புராணங்கள் எடுத்துரைப்பதற்கு மேல் மருத்துவத்துறை இதன் நற்குணங்களை மிகவும் புகழ்கின்றது. 

ருத்திராட்சை கழுத்திலணிவதால் புற்று நோய்முதலிய நோய்கள் கூட தணியும் என்று அண்மையில் வெளிவந்துள்ள சில ஆராய்ச்சிக்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

பித்தம்,தாகம் விக்கல் போன்றவை மாறுவதற்கு ருத்திராட்சை நல்லது என்று ஆயுர் வேதம் உறுதிகூறுகின்றது. 

கபம்,வாதம்,தலைவலி முதலிய பல நோய்களுக்கும் துன்பங்களுக்கும் ருத்திராட்சம் மருந்தாகும் என்று ஆயுர் வேதம் கூறுகின்றது.

ருசியை விருத்தியடையச் செய்யும் என்று ருத்திராட்சையைச் சிறப்பித்து நிரூபித்திள்ளனர். 

இது சில மன நோய்களுக்கும் சாந்தமளிக்கும் என்று கண்டுள்ளனர்.

மேலும் பல மருந்துகளிலும் ருத்திராட்சை ஒரு சேர்வைப் பொருளாகும். 

ருத்திராட்சம் வறுத்து நாவில் பூசினால் பேச்சுத்திறனை மறுபடியும் பெற்றுள்ளதாக பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ருத்திராட்சை பசுவின் சிறுநீர்,துளசிநீர்,இளநீர்,பிரம்மி என்பவை சேர்த்து பிரம்ம முகூர்த்தத்தில் அருந்துவது புத்தி விருத்தியடைய உதவும் எனக் கண்டறிந்துள்ளனர்.

கண்டகாரி, திப்பலி என்பவையுடன் ருத்திராட்சை சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். 

பார்க்கப் போனால் ருத்திராட்சையின் ஒளடத குணங்கள் ஏராளம் ஏராளம்.

இதுதான் ருத்திராட்சை அணிவதிலும் நம் முன்னோர்கள் மிகமுக்கியத்துவம் அளித்திருந்தனர்.

ருத்திராட்ச மாலையின் பெருமை என்று சொன்னால், ஏக முக ருத்திராட்சத்தின் அதி தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள். இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம் விலகும்.

மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னி தேவனாகும். இதை அணிவதால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பிரம்மாவாகும். இதை அணிவதால் பிரம்மா ப்ரீதி அடைவதுடன், மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக்கூடாத செயல் களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியராகும். இதை அணிவதால் ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன், பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும்.

எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப் பெருமானாகச் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன், செய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம் விலகுகிறது.

ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில் வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச தோஷங் களும் விலகும்.

பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. இதை அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம் செய்த பலன் களும் பல வாஜபேயயாகம் செய்த பலனும் கிட்டும்.

ருத்திராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், அவர்களால் பிறர் அனைவரும் பயன்பெறும் வகையிலும் நன்மைகளும் அமையும்.

ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும், அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு அன்னமளிப்பவர்களும், ருத்திராட்சமரத்தைப் பராமரிக்கிறவர்களும், புதிய ருத்திராட்சத்தை தானம் செய்பவர்களும்சிவபெருமானுக்கு ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும் பல சிறப்பு நலன்களைப் பெற்று வாழ்வாங்கு  வாழ்வார்கள்.

ருத்திராட்சத்தால் ஜபம் செய்கிறவருக்கு அனைத்து மந்திர சித்திகளும் எளிதில் கைவரப்பெறும்.
ஒரு முக ருத்திராட்சம் முதல் பதினாறு முகம் ருத்திராட்சம் வரை அணிவதன் மூலம் பல பலன்களை அடையலாம். 
தரமான நேபாள் ருத்ராக்ஷ 1,முகம்முதல்21முகம்வரை
கிடைக்கும்.
##############################
AAGARSHAN METAL WORKS
www.spirituals4u.blogspot.in
whatsapp:+917305066366




Comments

Popular posts from this blog

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும்,  சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம்  தேதியில் பிறந்தவர்களும்  மாணிக்கம் இராசி கல்  பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும்  துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால்  நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும்,  செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்  கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. குளிர்ச்சி சம்பந்தத்தினால் ஏற்படும் வியாதிகளை மாணிக்க கல் க

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. கேரளா

நவரத்தினங்களில் மரகதம் கல் பயன்கள்:

NATURAL EMERALD GEMSTONE BENEFITS: மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது. மரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும். இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும். நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை