Skip to main content

முத்து பதித்த மோதிரம் : NATURAL PEARL GEMSTONE RING(ANGUTTI) BENEFITS.

முத்து பதித்த மோதிரம் 
NATURAL PEARL GEMSTONE RING BENEFITS.
#################################
 கடக இராசிகாரர்களும்,
ரோகினி-ஹஸ்தம்-திருவோணம் நட்சத்திர காரர்களும்,
ஜாதகத்தில் சந்திர புத்தி-சந்திர திசை- சந்திர பார்வை நடக்கும் அன்பர்களும் அணிந்து சந்திர பகவானின் பலன்களை முழுமையாக பெறலாம்:
************************************
இயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
###################################
முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும்.

இது இயற்கையில் நீரில் வாழு கின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரி னங் களிலிருந்து பெறப்படுகின்றது.

மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.

உயர் தர முத்துகள் எப்படி உருவாகின்றன என்றால், கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உரு வாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப் பவை), சில நேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.

அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்து விடும்.

அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்து விட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம் முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகி விடுகிறது.

இது போல் இயற்கையாக உருவாகும் முத்துக்கள் தான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

#####################################################
செயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும்மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிப்பியினுள் ஏதேனும் சிரியப் பொருள் சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை சுரந்து அதன் மீது மூடிவிடும்.

அதைத் தெரிந்துகொண்ட சீனர்கள் சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள் ஈயத்தால் செய்த சிறு புத்தர் சிலையைப் புகுத்தினார்கள்.

சிறிது காலம் கழித்து சிப்பி யைத் திறந்து பார்க்கும் போது முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

ஜப்பானியர்கள் சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளேதள்ளிவிடுவார்கள்.

அவ்வாறு தள்ளப் பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

1896 இல் ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கி மோட்டோ என்பவர் செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை விருத்தி செய்து அதற்காக உரிமம் ஒன்றையும் பெற்றுக் கொண்டார்.

இம்முறையில் முசெல் வகை உயிரினத்தின் ஓட்டிலிருந்து செய்ய ப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்ட நுண்துகள் இன்னொரு முத்துச் சிப்பியின் திசு வினால் சுற்றப்பட்டு முத்துச் சிப்பியின் உடலுக்குள் செலுத்தப்படும்.

இச்சிப்பிகள் ஒரு கூட்டினுள் இடப்பட்டு நீருக்குள் இறக்கப்படும். இவை முத்துக்களை உருவாக்கச் சுமார் மூன்று தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை எடுக்கும்.

###############################################
நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர்.

அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம் என்கிறார்கள்.

இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர்.

அக்கால இலக்கியங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும் முத்துமாலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்காலத் தமிழ் மகளிர் முத்து மாலை அணிந்துள்ளனர். முத்துக்கள் நிரப்பப்பட்ட சிலம்புகளையும் அணிந்துள்ளனர்.

சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது.

முத்து உருவாகுதலை முத்து விளைகிறது என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

மெல்லுடலிகள் என்ற பிரிவின் கீழ் வரும் கடல்வாழ் உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய க்வாட்ருலா, யூனியோ, மார்கரிட்டேனே என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.

கடலில் எல்லா இடங்களிலும் முத்து கிடைப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே முத்து கிடைக்கிறது.

முத்துக்கள் என்பது அரகோனனட் என்றும் ஒரு வகையான சுண்ணாம்புப் (கால்சியம் கார்பனேட்) படிகங்களால் ஆனவையாகும்.

கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு, சுமார் இருபது மீட்டர் வரை உள்ள ஆழங்களில் சிப்பிகள் படுகைகளாகக் காணப்படுகிறது.

மூச்சடக்கிக் கொண்டு கடலுக்குள் மூழ்கி இச்சிப்பிகளை சேகரித்து வருதலே முத்துக் குளித்தல் எனப்படுகிறது.

தற்போது நவீன முறையில் சிப்பிகள் அள்ளப்படுகின்றன.
எல்லா சிப்பிகளிலும் முத்து காணப்படுவதில்லை.

முத்துக்கள் பல வகைப்படும். ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும். பத்து நிறங்களில் முத்து கிடைக்கிறது.

எனினும் பொதுவாக கிரீம் நிறமாகவோ அல்லது பிங்க் நிறமாகவோதான் இருக்கும்.

வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன் நிறங்களிலும் முத்து காணப்படுகிறது. அந்தமான் தீவுகளில் கருப்புநிற முத்துக்கள் கிடைக்கின்றன.

பொதுவாகவே முத்துக்கள் உருண்டையாக இருக்கும். ஆனாலும் நீர்த்துளியின் வடிவத்திலோ சற்று ஒழுங்கற்ற உருண்டை வடிவத்திலேயோ முத்து காணப்படலாம்.

முத்துச் சிப்பிகளின் ஆயுட்காலம் ஐந்தரை ஆண்டுகளாகும். முத்துக்களின் வாழ்நாள் 100 முதல் 300 ஆண்டுகளாகும். சில முத்துக்கள் 500 ஆண்டுகள் வரை இருக்கும், அதன்பின் முத்துக்களின் பளபளப்பு குறைந்து நிறம் மங்குவதுடன் முத்துக்கள் மேல் வெடிப்பு ஏற்படும்.

முத்துக்களை யார் வேண்டுமானாலும் அணியலாம். 

முத்து அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல்சூடு நீங்குமென மருத்துவர்கள் குறிப்பிடுகின்றன.

உலக அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஜப்பான் - இந்திய அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஐதராபாத் நகரம்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் முத்து அதிகம் கிடைக்கின்றது.

சீனா, ஜப்பான், ஹாங்காய், இலங்கை நாடுகளிலிருந்து முத்துக்கள் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மும்பையில் பெருமளவில் விற்பனையாகிறது.

சந்தைகளில் விற்கப்படும் முத்துக்கள் மீன் வாசனையோடு இருக்கும்.
சில வகையான ரசாயனக் கரைசலில் முத்துக்களை மூழ்க வைத்து உலர வைக்கும் போதுதான் முத்துக்கள் வெண்மையான நிறத்தைப் பெறுகின்றன.

உலக அளவில் மன்னர் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சிறப்பான முத்துக்கள் கிடைக்கின்றன.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலப் பெண்கள்தான் அதிக அளவில் முத்து மாலைகளைச் செய்து அணிந்து கொள்கின்றனர்.

தற்போது செயற்கையில் சிப்பிகளினுள் திரவத்தைச் செலுத்தி செயற்கை முத்து தயாரிக்கிறார்கள்.

12ம் நூற்றாண்டிலேயே சீனர்கள் வளர் முத்துக்களை உருவாக்கியுள்ளனர். செயற்கை முத்துக்களின் தந்தை எனப்படுபவர் மிகிமாட்மோ என்ற ஜப்பானியர் ஆவார். 1893ல் முதல் முறையாக செயற்கை முறையில் முத்தை உருவாக்கினார்.

முத்துக்களை ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும். தங்க நகைகளோடோ அல்லது இதர ஆபரணங்களோடோ முத்து நகைகளை வைக்க வேண்டாம்.

காற்றுப்புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டும். ஸ்பிரே மற்றும் வாசனைப் பொருட்களுடன் முத்து மாலைகள் வைக்க வேண்டாம்.

முத்து மாலையைப் போடுவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தித் துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.

காகிதம், சாயம் போகும் துணியில் முத்தை வைக்க வேண்டாம். இவற்றால் முத்தை துடைக்கக் கூடாது.

அமிலங்கள், இரசாயனப் பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.

முத்து சிறந்த மருத்துவப் பொருளாகும். பல்வேறு நோய்களை முத்து தீர்க்கிறது.

முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகள் கலந்து பல்வேறு மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.

முத்து இளமையைக் காக்கும். அழகு சாதனங்கள் தயாரிக்க முத்து பயன்படுகிறது.

நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்த முத்து பயன்படுகிறது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
உங்கள் ஜாதகத்தில் சுபங்கள் தரக்கூடிய கிரகத்தை கணித்து, சுபங்களை அதிகரிக்க செய்ய தரமான இராசிகற்கள் மோதிரத்தில் பதித்து செய்து தரப்படும்.
~~~~~~~~ஓம் நம சிவாய வாழ்க ............................
####################################################
சிவ பைரவர் மெட்டல் ஒர்க்ஸ்
NATURAL GEMSTONE RINGS & SPIRITUAL PRODUCTS
www.spirituals4u.blogspot.in
whatsapp:7305066366

Comments

  1. Princess, Yes, but most of the influence comes from symbolism if each finger and the material the ring is made. Choose your birthstone, or diamonds work well for everyone, provided you wear it on the right time and day. Little finger or fore finger shows good result's. All the Best from Rizwana! rings

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. க...

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும்,  சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம்  தேதியில் பிறந்தவர்களும்  மாணிக்கம் இராசி கல்  பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும்  துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால்  நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும்,  செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்  கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. ...

சித்தர்களின் சொன்ன வழிமுறையில் செய்யப்பட்ட ஐம்பொன் மோதிரங்கள் காப்பு:

பஞ்சலோக நகை சிறப்புகள்: ######################## பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம். தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம். இதில் தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும் , செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும். ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன. நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன் உலோகங்கள் , உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது. நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது. வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என...