நவரத்தினங்களில் பவழம் கல் மோதிரம்: ############################# பவழம் கடல் வாழ் முதுகெலும்பற்ற உயிரின வகையைச் சேர்ந்தவையாகும். இவற்றின் மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும். இவைகள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. கடலில் விளையும் இரு ரத்தினங்களில் பவழம் பவழப்பூச்சிகள் எனப்படும். சிறிய உயிரினங்களினால் உருவாக்கப்படுகின்றன. கடினமான பாறைகளின் மேல் இந்த பூச்சிகள் நின்று கொண்டு இரை தேடும் போது இப்பூச்சிகள் உடல்களிலிருந்து உண்டாகக்கூடிய எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன. இதுவே பவழம் உண்மையாக உற்பத்தியாகும் முறையாகும். பவழம் கால்சியம் கார்பனேட்டினால் ஆனது. மிகச் சிறந்த பவழம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்றும், செம்பருத்தி பூவின் நிறத்தைப் போன்றும், கோவைப் பழத்தைப் போன்றும் செந்திறமாக இருக்கும். நாம் பவழம் என்றாலே சிவப்பு நிறம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. வெண் பவழம் என்றால் முருகப்பூ போன்ற நிறத்துடன் காணப்படும். பவழத்திற்கு ஆங்கிலத்தில் (RED CORAL) கோரல் என்று ப